காலை 8.45 மணிக்கு இறந்து போன உறவுகளுக்காக 2 நிமிட மௌன அஞ்சலி : ஏப்ரல் 21 தாக்குதல் ஓராண்டு நினைவு இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு!

Tuesday, April 21st, 2020

ஏப்ரல் 21 தாக்குதல் நடாத்தப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முதலாவது தாக்குதல் நடாத்தப்பட்ட நேரமான காலை 8.45 அளவில் தமது வீடுகளில் இருந்து வாழும் உறவுகள் மரணித்துப்போன உறவுகளுக்காக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொது மக்களின் ஆத்ம சாந்திக்காகவும் பாதிப்புற்றோரிற்கு ஆசி வேண்டியும் பௌத்த, இந்து, முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மத விசேட வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைக்குரிய ஏற்பாடுகளும் நாடுமுழுவதும்  மேற்கொள்ளப்பட்டுள்ளதாக புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்து மதம் சார்ந்த விசேட வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைக்குரிய ஏற்பாடாக இன்று காலை 9 மணியளவில் இந்து மக்கள் தமது இருப்பிடங்களிலிருந்து பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் இந்து ஆலயங்களில் மாலை 5 மணியளவில் ஆலய மணிகளை ஒலிக்கச் செய்து விசேட வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

இந்த விசேட வழிபாட்டின்போது கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களை மீறதவாறு பிரார்த்தனையில் ஈடுபடுமாறும் புத்தசாசனம் கலாசாரம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சு வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: