காலியில் புவி அதிர்வு!

Tuesday, September 27th, 2016

 

காலியில் இன்று சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹபுகல பகுதியில் இன்று அதிகாலை இந்த பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நில அதிர்வு தொடர்பான தகவலை காலி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி முகாமையாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

எப்படியிருப்பினும் நில நடுக்கம் அல்லது நில அதிர்வு தொடர்பில் இதுவரை எவ்வித பதிவுகளும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். இந்தோனேஷியாவின், நிகோபார் தீவிற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்வு, காலியில் உணரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மக்கள் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என பிரதீப் கொடிபிலி மேலும் தெரிவித்துள்ளார்.

1448427924-8222

Related posts: