காலநிலை ஆராய்வு தொடர்பில் இலங்கை – ஜப்பான் இடையே ஒப்பந்தம்!

Saturday, July 1st, 2017

இலங்கையில் காலநிலை நிலைமைகளை ராடர் கருவிமூலம் கண்டறியும் வலைப் பின்னல் ஒன்றை ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தம் ஒன்று ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையே கைச்சாத்தாகியுள்ளது

ஜப்பானிய சர்வதேச கூட்டுறவு அமைப்பிற்கும் இலங்கைக்கும் இடையே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதுகுறித்த ஒப்பந்தத்தின்படி, 340 கோடி ரூபாய் பெறுமதியான இந்த வலையமைப்புத் தொகுதி காலநிலை அவதான நிலையத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

இயற்கை அனர்த்தம் தொடர்பான தகவல்களை இந்த நவீன தொழில்நுட்பத்தின் மூலம் முன்கூட்டியே பெற்று அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: