காலஞ்சென்ற கந்தையா சச்சிதானந்தத்தின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா இறுதிஅஞ்சலி!

Friday, September 23rd, 2016

காலஞ்சென்ற கந்தையா சச்சிதானந்தனின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி செலுத்தினார்.

கொழும்பு கல்கிஸை மகிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக பூதவுடல் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் (23) அங்குசென்ற செயலாளர் நாயகம்  மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதனிடையே அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தா தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் நெருங்கிய உறவைக்கொண்டிருந்த அமரர் கந்தையா சச்சிதானந்தம் நேற்றையதினம் (22) காலமானார். இறுதிக் கிரியைகள் கல்கிசை மயானத்தில் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed (2)
unnamed (1)

unnamed (3)

unnamed

unnamed (4)

Related posts: