காரைநகர் ஊரி கிராம மக்களின் கோரிக்கை!

Sunday, February 25th, 2018

காரைநகர் ஊரி கிராம மக்கள் பல்வேறுபட்ட அடிப்படை பிரச்சனைகளுடன் தமது அன்றாட வாழ்க்கையினை கழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வறுமைக்குகோட்டின் கீழ் வாழ்ந்துவரும் இந்த மக்கள் கடல் தொழிலை நம்பி வாழ்ந்து வருவதுடன் பொருளாதார ரீதியாகவும், வீதிப் பிரச்சனை, குடிநீர்ப் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில், சுமார் 300 குடும்பங்கள் வாழ்ந்து வரும் இந்த கிராமத்தில், பாடசாலை மாணவர்கள், தொழிலாளர்கள், பிரதேச மக்கள் என பலரும் பயன்படுத்தும் பிரதான வீதி பயன்படுத்த முடியாமல் மிக மோசமான நிலையில் காணப்படுவதாகவும், அன்றாட தேவேவைகளுக்காக பயன்படுத்தும் நீரைப் பெறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் சீரான முறையில் குடிநீர் வாங்கப்படாததன் காரணமாக நீண்ட தூரம் சென்று நீரை பெற்றுக்கொள்வதாகவும், ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்துகின்ற உவர் நீரையே சமையலுக்கு பண்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை தமது நிலையினை கருத்தில் கொண்டு குடிநீர் விநியோகம், வீதிப் புனரமைப்பு, மற்றும் போக்குவரத்து வசதிகளை சீரான முறையில் பெற்றுத்தர உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என் அந்த மக்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts: