காபன் நிகர பூச்சிய நிலை நாடாக இலங்கையை உருவாக்க நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம்!

Wednesday, February 16th, 2022

2050 ஆம் ஆண்டளவில் இலங்கை காபன் நிகர பூச்சிய நிலை நாடாக உருவாக்குவதற்குத் தேவையான திட்ட வரைபு மற்றும் மூலோபாயங்கள் தொடர்பான திட்டத்தைத் தயாரிப்பதற்கு நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கும் சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கை காபன் நிகர பூச்சிய நிலையை அடைவதற்காக முக்கியமாக வளிமண்டலத்திற்கு வெளியேற்றப்படும் பச்சைவீட்டு விளைவு வாயுக்களின் அளவுகளைக் குறைக்க வேண்டியதுடன், வளிமண்டலத்திலிருந்து காபனீரொட்சைட் வாயுவை உறிஞ்சுகின்ற சுற்றாடல் தொகுதியை அதிகரித்தல் வேண்டும்.

2050 ஆம் ஆண்டளவில் இலங்கை காபன் நிகரப் பூச்சிய நிலை கொண்ட நாடாக உருவாக்கும் இலக்கை அடைவதற்கான திட்டவரைபை மற்றும் மூலோபாயங்களைத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 05 வருடங்களுக்கு ஒருமுறை மீளாய்வு மேற்கொண்டு திருத்தியமைக்கப்படும் திட்டவரைபு மற்றும் ஐந்தாண்டு மூலோபாயத் திட்டத்தைத் தயாரிப்பதற்கும், அதற்கு விசேட நிபுணத்துவத்துவதுடன் கூடிய நிபுணர் குழுவொன்றை நியமிப்பதற்கும் சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: