காணி உரிமங்களை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கந்தர்மடம் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, November 24th, 2016

தமது குடியிருப்பு காணிகளுக்கு நிரந்தர காணி உரிமங்களை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கந்தர்மடம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்றையதினம் குறித்த பகுதி மக்களது நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொள்ளும் முகமான சென்றிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் நல்லூர் தொகுதி நிர்வாக செயலாளர் அம்பலம் இரவிந்திரதாசனிடமே குறித்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குறித்த பகுதி மக்களால் தமது பகுதிக்கான  சுயதொழிலுக்கான வழ்வதார உதவிகள்  வீதி புனரமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்களது கோரிக்கைகளை கேட்டறிந்துகொண்ட  இரவீந்திரதாசன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டுசென்று தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக குழு உறுப்பினர் திருமதி தயாழினி மற்றும் மாதர் அமைப்பை சேர்ந்த உறுப்பினர்களும் உடனிருந்தனர்.

20161124_161028

20161124_160948

20161124_161035

Related posts: