காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவிப்பு!

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அயகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் நிறுவனங்களுக்குச் சொந்தமான விவசாயம் செய்யப்படாத காணிகளை சுவீகரித்து மீண்டும் பயிர்ச்செய்கைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஆங்கில பாடத்தில் 51 வீதமான மாணவர்களே சித்தி!
தமிழ் கட்சிகளின் 13 அம்சக் கோரிக்கைகள் சாத்தியமற்றவை வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா!
அனைத்து மாணவர்களும் முகக்கவசம் அணிவது அவசியம் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்தல்!
|
|