காணிப்பிரச்சினைகளை விரைவாக தீர்க்க நடவடிக்கை – அமைச்சர் கயந்த கருணாதிலக!

Friday, August 11th, 2017

காணிப் பிரச்சினைகளை விரைவாக தீர்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தேர்தல் தொகுதிக்கு உட்பட்ட மக்களின் காணிப்பிரச்சினைகளை தீர்ப்பார்கள். இதற்காக ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் வாய்ப்பு வழங்கப்படும். அன்றைய தினங்களில் நாடாளுமன்ற ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் அலுவலகத்தில் காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலைத் திட்டங்கள் இடம்பெறவுள்ளன.

Related posts: