காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய விரைவில் விசேட குழு

Monday, May 22nd, 2017

காணாமல் போனவர்கள் தொடர்பில் தரவுகளுடன் தெரிவிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் தொடர்பில் ஆராய அரசாங்கம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்

சம்பூர் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்

இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை கருத்தில் கொண்டு காணாமல் போனவர்கள் தொடர்பில் ஆராய விரைவில் விசேட குழு ஒன்று நியமிக்கபடவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்

மக்களை திசை திருப்பி இனவாத செயற்பாடுகளை தூண்டும் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, கிடைக்கப்பெற்றுள்ள சமாதானத்தையும் சுதந்திரத்தையும் மக்கள் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்

Related posts: