காணாமல்போனோர் பணியகத்தின் அணைக்குழுவில் மூவரே தமிழ்மொழி பேசுபவர்கள்!

Thursday, December 14th, 2017

காணாமல் போனோர் பணியகத்தின் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்க பரிந்துரை செய்யப்பட்ட எழுவரில் மூவர் மட்டுமே தமிழ் மொழி பேசுபவர்கள் எனச்சுட்டிக்காட்டப்படடுகின்றது.

இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள காணாமற் போனோர் செயலகத்தின் உயர் குழுவில் அங்கம் வகிக்கும் ஏழுபேரின் நியமனத்துக்காக அரச தலைவரிடம் பரிந்துரை செய்யப்பட்ட ஏழு பேரில் இரு தமிழரும் ஒரு முஸ்லிம் பிரதிநிதியுமாக மூன்று தமிழ் பேசும் பிரதிநிதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்ததைச்சேர்ந்த சட்டத்தரணி ஜெயதீபா முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரான கணபதிப்பிள்ளை வேந்தன் மற்றும் முஸ்லிம இனத்தைச்சுர்ந்த மீராக் ரகீம் ஆகியோரே அவர்கள்.

Related posts: