காசநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் 183 பேருக்கு 5,000 உதவித்தொகை!

Saturday, October 14th, 2017

வடக்கு மாகாணத்தில் காச நோயால் பாதிக்கப்பட்ட 183 பேருக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளதாக மாகாண சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவித்திட்டங்களை  திணைக்களம் வழங்கி வருகின்றது. காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெறுவது அவசியம். இதன்போது அவர்களுக்கு போசாக்குள்ள உணவும் அவசியமாகின்றது.

ஆகவே வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்ட நபர்களுக்கு திணைக்களத்தால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. ஒருமாதத்துக்கு 5 ஆயிரம் ரூபாவீதம் அவர்களுக்கு வழங்கப்படுகின்றது.

இதனைப் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் நோய்க்குள்ளானவர் மருத்துவரின் உறுதிப்படுத்தலுடன் திணைக்களத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். உதவித் தொகை வழங்கப்படும். இதுவரை வடக்கு மாகாணத்தில் 183 பேருக்கு இந்த உதவித் தொகையை திணைக்களம் வழங்கியுள்ளது. ஒருவரின் சிகிச்சை 9 மாதமளவில் நிறைவு நிலைக்கு வரும். 9 மாதம் வரை மருத்துவரின் உறுதிப்படுத்தலுக்கு அமைவாக திணைக்களம் உதவிகளை வழங்கி வருகின்றது – என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: