காங்கேசன் துறை துறைமுகத்தை மறுசீரமைக்க இந்தியா நிதி ஒதுக்கீடு!
Sunday, February 4th, 2018
காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்புச் செய்வதற்கு இந்திய அரசால் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசின் கடைசிவரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது
ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசின் கடைசி வரவு செலவுத் திட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருன் ஜெட்லியால் நேற்று முன்தினம் சமர்ப்பிக்கப்பட்டது அதில் இந்தியாவின் மூலோபாய இராஐதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அயல் நாடுகளான இலங்கை நேபாளம் பூட்டான் ,மாலைதீவு,சிசெல்ஸ் ,மெறிசியஸ்,போன்ற நாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன
சீனாவின் தலையீடுகளைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளான இலங்கை மாலைதீவு,சிசெல்ஸ் ,மெறிசியஸ், போன்றவற்றுக்கு கணிசமான நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
கடந்த ஆண்டு 200 கோடி இற்திய ரூபா ஒதுக்கப்பட்ட சிசெல்ஸ்க்கு அந்த ஆண்டு 300கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது அங்குள்ள 115 தீவுகளில் ஒரு தீவில் இந்தியா முழுமையான உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுக்கவுள்ளது வானூர்தி ஓடுபாதை இறங்குதுறை என்பவற்றையும் இந்தியா அமைக்கவுள்ளது அவை இராணுவப் பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படாது இலங்கைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு 75 கோடி ரூபாவாக இருந்தது அது இந்த முறை 150 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது அதில் காங்கேசன்துறை துறைமுகத்தை இந்தியா மறுசீரமைக்கவுள்ளது
இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 15 ஆயிரத்து 11கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது கடந்த ஆண்டை விட 213 கோடி ரூபா அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது
Related posts:
|
|