கழிவுப் பொருட்களை அகற்றுவது தொடர்பில் நெருக்கடிகள் ஏற்படுமாயின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்!

Tuesday, April 25th, 2017

கழிவுப் பொருட்களை  அகற்றுவது தொடர்பில் எந்தப் பிரதேசத்தில் ஏனும் நெருக்கடிகள் ஏற்படுமாயின் அது பற்றி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆர்ப்பாட்டங்களை நடத்துவதன் மூலம் எந்தப் பயனும் கிடையாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கருடனான சந்திப்பின் பின்னர் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தார்.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கையில் :

மீத்தொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவு தொடர்பாக ஆராய்வதற்கென இலங்கை வந்துள்ள ஜப்பான் நிபுணர்கள் குழு எதிர்வரும் வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க இருக்கின்றது. இது பற்றி உள்நாட்டுக் குழுவொன்றும் உலக வங்கியின் நிபுணர்கள் குழுவும் விசாரணைகளை மேற்கொள்கின்றது.

கழிவு முகாமைத்துவம் பற்றி கூடுதல் கவனம் செலுத்தி அதற்கென சர்வதேசத்தின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படும். இதற்காக பிரதான நகரங்களில் தனியார் முதலீடுகளுக்கான அனுமதிப் பத்திரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

Related posts: