கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவிப்பு!

Saturday, October 7th, 2023

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

48 ஆயிரம் 909 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையின் அனைத்து ஆவணங்களும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்; டிரான் அலஸினால் கத்தோலிக்க ஆயர்கள் சங்கத்தின் தலைவரிடம் கடந்த ஏப்ரல் 20 ஆம் திகதி கையளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான், கத்தோலிக்க ஆயர்கள் சங்கத்தின் தலைவருடன் நேற்று தொலைபேசியில் கலந்துரையாடியதுடன், குறித்த அறிக்கையை தானும் ஆராய்ந்து வருவதாக அவர்; குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அறிக்கையை ஆராய்ந்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கத்தோலிக்க ஆயர்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகி வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கு உடன்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும், சர்வதேச விசாரணைகளை நடத்துவதற்கு அரசியலமைப்பிலும் ஏனைய சட்டங்களிலும் இடமில்லை எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான செனல் 4 தொலைக்காட்சி நிகழ்ச்சி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை வெளியிடுவதற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: