கண்புரை நோயாளருக்கான இலவச சிகிச்சைக்கான பரிசோதனைகள் விரைவில் யாழில் ஆரம்பம்!

Wednesday, May 23rd, 2018

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கடந்தவாரம் ஆரம்பிக்கப்பட்ட கண்புரை நோயாளர்களுக்கான இலவச சத்திர சிகிச்சைத் திட்டத்துக்கு இதுவரையில் 60 நோயாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

சத்திர சிகிச்சைக்கு முன்னரான பரிசோதனைகள் இம்மாத இறுதியில் தென்னிலங்கை, இந்தியா ஆகியவற்றைச் சேர்ந்த வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட உள்ள நிலையில் இத்திட்டத்தில் பயனாளிகளாக இன்னும் இணைய விரும்புவோர் அவர்களின் விபரங்களை விரைவாக பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முன்பரிசோதனைகள் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட பின்னர் நோயாளர்கள் கட்டம் கட்டமாக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு சத்திர சிகிச்சை வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்படுவார்கள்.

இது வரையில் பதிவுகளை மேற்கொள்ள தவறியோர் 0702095920 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கோரப்படுகின்றனர்.

Related posts: