கணினித் திரை முன்னால் மாணவர்கள் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் அதிக கவனம் வேண்டும் – எச்சரிக்கிறார் கொழும்பு கண் வைத்தியசாலையின் விசேட நிபுணர்!

Monday, January 4th, 2021

மாணவர்கள்  இணைய வழியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் கணினித் திரையின் முன்னால் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் கவனத்தில் கொள்வது அவசியம் என கொழும்பு கண் வைத்தியசாலையின் விசேட நிபுணரான மானெல் பஸ்க்குவெல தெரிவித்துள்ளார்.

தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரையான வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் ஓய்வின்றி நாளொன்றுக்கு இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் கணினித் திரையின் முன்னால் அமர்ந்திருப்பது உசிதமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் மூலம் பிள்ளைகளின் கண்களுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஆசிரிகள் மாத்திரமன்றி பெற்றோரும் அதிக கவனம் செலுத்துவது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: