கட்டைக்காட்டில் மீனவரின் படகு தீக்கிரை!

Monday, July 23rd, 2018

கட்டைக்காட்டுப் பகுதியில் கடற்படைத் தளத்திற்கு அருகில் நிறுத்தி வைத்திருந்த செபமாலை சுஜீபன் என்பவருக்குச் சொந்தமான படகு மற்றும் இயந்திரம் , வலைகள் என்பன இனந்தெரியாதவர்களால் தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நீரியல் வளத் திணைக்களத்திற்கு சொந்தமான கடற்பிரதேசத்திற்கு உட்பட்ட கட்டைக்காட்டுப் பிரதேசத்தில் உள்ள கடற்படைத் தளத்தின் முன்பாக குறித்த படகின் உரிமையாளர் படகினை நிறுத்தி வைப்பது வழமை.
இவ்வாறு தீயிட்டு கொழுத்தப்பட்ட கடல் உபகரணங்களின் பெறுமதி தற்போது 5 இலட்சம் ரூபா எனவும் குறித்த மீனவரால் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் பொலிஸாருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டள்ளது.
இதனிடையே குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு மிக அருகாமையில் கடற்படை காவலரண் ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: