கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் விரைவில் திறக்க ஆலோசனை – அமைச்சர் பிரசன்னா ரனதுங்க!

Monday, June 15th, 2020

சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னரே மீண்டும் திறக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரனதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர் வெளிநாடுகளில் நிர்க்கதியாக உள்ள இலங்கையர்கள் அனைவரையும் அழைத்து வர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் சுமார் 20ஆயிரம் இலங்கையர்கள் நிர்க்கதியான நிலையில் உள்ளனர். ஏற்கனவே 10ஆயிரம் பேர் வரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

எனினும் இது இலங்கையில் நடைமுறையில் இருக்கும் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையங்களின் இடவசதியை பொறுத்தே அமையும் என்று அவர் தெரிவித்துள்ள அமைச்சர் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் அவர்கள் வருகையில் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: