கட்டுநாயக்கா விமானத்தள விஸ்தரிப்புக்கு ஜப்பானிய வங்கி உதவி!

கட்டுநாயக்க விமானத்தள விஸ்தரிப்புக்காக ஜப்பானின் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி (ஜெய்கா) இலங்கையுடன் 56 பில்லியன் ரூபாய்களை வழங்க உடன்படிக்கை ஒன்றை செய்துக்கொண்டுள்ளது.
புதிய விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் கட்டுநாயக்க விமானத்தளத்தில், பயணிகளுக்கான புதிய இடம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.
இதன் கீழ் வருடம் ஒன்றுக்கு 15 மில்லியன் பயணிகளை இந்த விமான நிலையத்தின் ஊடாக கையாளக்கூடியதாக இருக்கும். தற்போது இந்த விமான நிலையத்தின் ஊடாக 8.5 மில்லியன் பயணிகளே வந்து செல்கின்றனர்.
இந்த திட்டத்தின் கீழ் 23 விமான தரிப்பிடங்களும் அமைக்கப்படவுள்ளன.96 மேலதிக பரிசோதனை மையங்களும் ஏற்படுத்தப்படவுள்ளன. அத்திட்டம் 2020ஆம் ஆண்டில் இந்த பணிகள் முழுமை பெறவுள்ளன.
Related posts:
யாழ் நகரில் தேசிய அடையாள அட்டை நடைமுறை இறுக்கமாகக் கடைப்பிடிப்பு – பலர் எச்சரிக்கப்பட்டபின் பொலிஸாரா...
அத்தியாவசிய உணவுப் பொருட்களை பொதுமக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை – துறைசார் ...
போராட்டம் முன்னெடுத்த காலம் தவறானது - அனைவரும் 21 ஆம் திகதி பணிக்குச் சென்று கடமையில் ஈடுபட வேண்டும...
|
|