கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை!

Saturday, February 16th, 2019

யாழ்ப்பாண மாநகர சபைப் பகுதிகளில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் வீதி விபத்துக்கள் உட்பட்ட பல அசௌகரியங்களை மக்கள் எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.

தெருநாய்களைப் பிடித்து அழிக்கும் நடைமுறை கடந்த பல வருடங்களாக அரசினால் நிறுத்தப்பட்டுள்ளமையால் பெருமளவு நாய்கள் மக்கள் கூடுமிடங்களான சந்தைகள், மருத்துவமனைகள், பாடசாலைப் பகுதிகளிலும் நகர மற்றும் புறநகர் வீதிகளிலும் கட்டாக்காலிகளாக அலைந்து திரிகின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்த யாழ் மாநகர சபையும் சுகாதார மற்றும் கால்நடை அமைச்சுக்களும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: