கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாக திறக்க முடியுமென – சிரேஷே்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவிப்பு!

Friday, September 24th, 2021

எதிர்வரும் முதலாம்திகதி தொடக்கம் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளின் கீழ் நாட்டை முழுமையாக திறக்க முடியுமென ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷே்ட பேராசிரியர் அர்ஜூன டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டை நீண்ட நாட்களுக்கு முடக்கியமைக்கான பெறுபேறுகள் தற்போது கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் நாட்டை திறந்தாலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் 25 வீதமான ஊழியர்களை பணிக்கு அழைக்குமாறும், பொது போக்குவரத்துகளில் 50 சதவீத பயணிகளை உள்வாங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேநேரம் திருமண நிகழ்வுகள், களியாட்டங்கள் உள்ளிட்டவற்றை நடத்துவதற்கு தொடர்ந்து தடை விதிக்க வேண்டுமென தெரிவித்த அவர், நாட்டு மக்களில் 70 தொடக்கம் 80 வீதமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே நாடு திறக்கப்படவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் கொவிட் மரணங்கள் மற்றும் நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்திருந்ததை அவதானிக்க முடிந்ததெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: