கடல்உணவு ஏற்றுமதியால் வருமானம் அதிகரிப்பு!

Wednesday, September 20th, 2017

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஆறு மாத காலப்பகுதியில் நாட்டின் கடல் உணவு ஏற்றுமதி 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக கடல்உணவிற்கான வெளிநாடுகளின் கோரிக்கை தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

2016ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் கடலுணவு ஏற்றுமதி மூலம் 12.9மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளது.இத்தொகை இவ்வருடத்தில் கடந்த ஜுன்மாதத்தில் 15.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் ஆறு மாத காலப்பகுதியில் ஏற்றுமதி மூலம் 83.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாக பெறப்பட்டுள்ளது.இந்த வருடத்தில் இத்தொகை 117 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கடும் மழை - யாழ்ப்பாணத்தில் மூன்று குடும்பங்கள் இடம்பெயர்வு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டது அறிவுறு...
பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காணும் கொள்கைத் திட்டத்தை சாத்தியமாக்குவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் ச...
தொழில் நுட்பங்களை வலுப்படுத்துவதனூடாக கோழி வளர்க்கும் தொழிலை ஒரு மக்கள் தொழிலாக மாற்றமுடியும் - பிரத...