கடமைக்கு சமுகமளிக்குமாறு மின்சார சபை அறிவிப்பு!

Saturday, September 16th, 2017

 

 

மின் சார சபை ஊழியர்கள் அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்கு கடமைக்குஉடனடியாக  சமுகமளிக்குமாறு மின்சார சபை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு : தடையற்ற மின் விநியோகத்திற்காக கடமைக்கு சமுகமளித்தல்

இலங்கை மின்சார சபை ஊழியர்கள், 5.5 பாவனையாளர்களின் அத்தியாவசிய சேவையான மின் விநியோகத்தை சீராக மேற்கொள்வதற்கு இலங்கை மின் சார சபை ஊழியர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாட் பணியாளர் . தற்காலிக ஊழியர்கள் மற்றும் தகுதிகான் ஊழியர்களும் தமது பணித்தளங்களுக்கு உடனடியாக சமூகமளிக்க வேண்டும். இவ்வாறு கடமைக்கு சமூகமளிக்கத்தவறுவோர் தமது பதவிகளிலிருந்து தாமாகவே விலகிச் சென்றதாக கருதப்படுவார்கள் என்று மின்சார சபை பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம்

 

Related posts: