கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் உத்தரவை உதாசீனம் செய்த 44,200 பேர் கைது!

Sunday, June 27th, 2021

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக 44 ஆயிரத்து 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதிமுதல் இதுவரையான காலப் பகுதியில் இவர்கள் 44 ஆயிரத்து 200 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கடந்த 24 மணிநேரப் பகுதியில் 361 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவற்றில் அதிகளவான கைதுகள் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருந்தாலும், மக்கள் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றும் பொலிஸார் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் - தாஜ் சமுத்ரா ஹோட்டல் தொடர்பில் விசா...
இறுதியாக பட்டப்படிப்பை நிறைவு செய்து வெளியேறிய பட்டதாரிகளுக்கும் விரைவில் நியமனம் - ஜனாதிபதியின் இணை...
பெற்றோல் விலை உயர்வு, கட்டண திருத்தத்தில் தாக்கம் செலுத்தாது - அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் ...