கடந்த மூன்று தினங்களில் மதுபோதையில் வாகனம் செலுத்திய 688 சாரதிகள் கைது!

Thursday, April 14th, 2016
கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் மதுபோதையில் வாகனம் செலுத்திய 688 சாரதிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட வாகன உரிமையாளர்களின் சாரதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 10 ஆம் திகதி முதல் மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கைது செய்யும் விசேட திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம், நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை 215 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 3 நாட்களில் கைது செய்யப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்கள் என்பதுடன், 380 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இந்த காலப்பகுதியில் 219 முச்சக்கரவண்டி சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts:


1700 பல்கலைக்கழக வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க 23ஆம் திகதி வரை அவகாசம் - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் ...
பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் புது டெல்லியில் மாநாடு - இந்தியா செல்கிறார் அமைச்சர் அலி சப்ரி!