கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் எந்தவொரு தலைவர்களும் வெற்றி பெறவில்லை – வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே!

Sunday, November 27th, 2016

கடந்த முப்பது வருட கால யுத்தத்தில் எந்தவொரு தலைவர்களும் வெற்றி பெறவில்லை. மாறாக, எமது மக்களுக்குத் இழப்பும், துன்பமும் மாத்திரமே கிடைத்தது. இதிலிருந்து நாம் மீண்டு வர வேண்டும் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

யாழ். வலிகாமம் கல்வி வலயத்தின் சாதனையாளர்  கெளரவிப்பு விழா நேற்று சனிக்கிழமை(26) முற்பகல்-9 மணி முதல் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் இடம்பெற்றது. இந்த விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த உலகத்திலேயே முக்கியமான சேவையைச் செய்பவர்கள் ஆசிரியர்கள். எந்தத் தொழில் செய்பவர்களாயினும் அவர்களை உருவாக்கிய பெருமை ஆசிரியர்களையே சாரும். எந்தவொரு உயர் பதவி வகிப்பவர்களையும் நாம் தெய்வத்திற்கு ஒப்பாக அழைப்பதில்லை. ஆனால், சிங்கள மொழியாக இருந்தாலென்ன?, தமிழ் மொழியாகவிருந்தாலென்ன? நாங்கள் குரு என அழைப்பது ஆசிரியர்களை மாத்திரமே.

வெளி மாவட்டத்தில் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர்களுள்ளனர். ஆனால், வடக்கு மாகாணத்தில் சிங்களம் சொல்லிக் கொடுப்பதற்கு ஆசிரியர்களில்லை. ஆகவே, இது தொடர்பாக வடக்கு முதலமைச்சர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

 unnamed (2)

Related posts: