ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி பகிரங்க அழைப்பு !

Sunday, November 7th, 2021

தாம் ஆட்சிக்கு வந்த சந்தர்ப்பத்தில் ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றையதினம் நாடு முழுவதும் நிர்மாணிக்கப்பட்ட 1,500 வீதிகள் திறந்துவைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு கையளிக்கப்பட்டது.

இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில், வீரகெட்டியவில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை கொண்டு மீண்டும் முன்னோக்கி வருமாறு இளைஞர், யுவதிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

விவசாயத்தில் ஈடுபட அச்சமடைய வேண்டாம். எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி ஒரேடியாக உரப்பாவனையை மாற்றுவது பாரிய சவாலாகும்.

எனினும் புரட்சிகர மாற்றத்தை நிச்சயமாக ஏற்படுத்துவோம் என்பதில் தான் உறுதியாக உள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தாக்கது.

Related posts: