ஓரிரு நாளில் மரக்கறிகளின் விலைகள் குறையும்!
Friday, July 20th, 2018தற்போது உயர்வாகக் காணப்படும் மரக்கறிகளின் விலை அடுத்த ஓரிரு நாள்களில் குறைவடையும் என்று ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் இக்காலப் பகுதியில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பதுண்டு. தற்போது சந்தைக்கு பயிரிடப்பட்ட அதிகமான மரக்கறிகள் அறுவடை செய்து பெறப்படுவதனால் மரக்கறிகளின் விலை குறைவடையும்.
காலநிலை மாற்றம் காரணமாக சில மாதங்களாக மரக்கறி வகைகளின் விலை அதிகரித்தன.
40 ரூபா வரி அறவிடுவதனால் இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை ஓரளவு அதிகரித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் அதிகளவில் அறுவடை செய்யப்படுவதனால் அடுத்த மாதம் முதல் விலை குறைவடையும். இதேவேளை முட்டையின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டுக்கள் இந்த வருடத்திற்குள் அறிமுகம்!
கணக்கீடுகள் முடிந்தவுடன் இறப்பு வீதம் குறையும் - சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவிப்பு!
உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கக் கோரும் மனு நாளை பரிசீலனை - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்...
|
|