ஓய்வூதிய திட்டத்துக்குள் உள்வாங்கப்படாத தனியார் துறையினருக்காக சமூக பாதுகாப்பு நிதியம் – தொழில் அமைச்சு தெரிவிப்பு!
Thursday, July 15th, 2021நாட்டில் ஓய்வூதிய கொடுப்பனவு கிடைக்கப்பெறாத பகுதிநிலை அரச ஊழியர்கள், தனியார் மற்றும் முறைசாரா துறையின் ஊழியர்களுக்கான சமூக பாதுகாப்பு நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பூர்வாங்க ஆவணத்தை தயாரிப்பதற்கு, பணிப்பாளர் சம்மேளனம், தொழிற்சங்கம் மற்றும் அரசாங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் தொழில் அமைச்சரின் தலைமையில் இடம்பெற்ற தேசிய தொழில் ஆலோசனை சபை கூட்டத்தில், இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயோதிபப் பருவத்தில் பொருளாதார பாதுகாப்பு இல்லாத பிரஜைகளுக்கு நன்மை பயக்கும் வகையில், சமூக பாதுகாப்பு நிதியம் செயற்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|