ஒரே நாளில் ஆயிரத்தை கடந்தது கொரோனா தொற்று!

Wednesday, April 28th, 2021

இலங்கையில் முதல் தடவையாக ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளிகள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் நேற்றையதினம் மொத்தமாக 1096 கொரோனா தொற்றாளிகள் பதிவாகியுள்ளனர் என இராணுவத் தளபதி சவேந்திரா சில்வாவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதேநேரம் கொரோனா தொற்று பரவுகை காரணமாக நாட்டின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகள் பயண எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு தொடரும் நெருக்கடி - வல்வெட்டித்துறை நகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்...
கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் வலிதென்மேற்கு பிரதேச செயலகத்துக்கு எதிராக போராட்டம்!
இந்திய - இலங்கை உறவு என்பது நட்புக்கு அப்பாற்பட்ட சகோதரத்துவமாகும் - தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ...