ஒரு தொகுதிஅகதிகள் இந்தியாவிலிருந்து இன்று நாடு திரும்புகின்றனர்!

இந்தியாவின் பல்வேறு அகதி முகாமிலிருந்து இலங்கை அகதிகள் 40 பேர் இன்று மீண்டும் நாடு திரும்பவுள்ளனர். இவர்கள் இன்று திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோயம்பத்துார், திண்டுக்கல், ஈரோடு, கரூர் நாமக்கல், புதுக்கோட்டை, சேலம், சிவகங்கை, மற்றும் திருச்சி ஆகிய பகுதிகளிலுள்ள அகதி முகாம்களில் வசித்து வந்த 14 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு நாடு திரும்பவுள்ளனர்.
இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு நாடு திரும்பும் முதலாவது தொகுதியினர் இவர்கள் என குறிப்பிடப்படுகிறது.கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தின் ஏற்ப்பாட்டில் 852 அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.
இதேவேளை, கடந்த ஜூலை மாதம் வரை தமிழகத்தின் 24 மாவட்டங்களிலுள்ள 108 அகதி முகாம்களில் 19 ஆயிரத்து 388 குடும்பங்களைச் சேர்ந்த 63 ஆயிரத்து 649 பேர் வசித்து வருவதாக தமிழக அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முகாம்களுக்கு வெளியில் 36 ஆயிரத்து 651 அகதிகள் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
Related posts:
|
|