ஒருசிலரது சுயநலன்களே மாநகரம் வெள்ளதத்தில் மூழ்க காரணம் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, January 13th, 2021

நீர்வடிகாலமைப்பு பொறிமுறையிலுள்ள சீரின்மையும் ஒருதரப்பினரது பக்கச்சார்பான சுயநலச் செயற்பாடுகளுமே யாழ் மாநகரப் பகுதி மழைகாலத்தில் வெள்ளத்தில் மிதக்கவேண்டிய பரிதாப நிலை உருவாகியுள்ளது என சுட்டிக்காட்டிய ஈழ மக்கள் ஜனநாயக கடையின் மாநகரசபை உறுபினர் றெமீடியஸ் இன்நினிலை மாற்றப்பட்டு மக்கள் நலன்களை முன்னிறுத்திய திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வில் சுகாதார நலன்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்.

மேலும் அவர் கூறுகையில்  – அண்மைக் காலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக யாழ் நகரப்பகுதி வெள்ளம் நிறைத்து வழிந்தோட முடியாத நிலை காணப்படுகின்றது.

இதற்கு பல காரணங்களை கூறினாலும் நீர் வடிகாலமைப்பின் பொறிமுறையிலள்ள தவறுகளெ காரணமாக உள்ளது.

அதுமட்டுமல்லாது நீர் வழிந்தோடும் மர்க்கங்கள் நிரவப்பட்டும் கட்டடங்கள் அமைக்கப்பட்டும் உள்ளது. இதன் காரணமாக நீர் கடலை நோக்கி செல்லும் வழிகள் தடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் சில வாய்க்கால்கள் புனரமைகப்படும் போது தூரநோக்கற்றவகையில் சுயநலன்களுக்காக அமைக்கப்பட்டுள்ளமையாலும் சில பகுதிகளில் ஒருபக்கச் சார்பாக அமைக்கப்பட்ட வடிகாலமைப்புகளாலும் தற்போது நீர் கடலக்கு செல்ல முடியாது யாழ் நகருக்குள் தேங்கி நிற்கின்றது.

இதற்கு சிறந்த ஒரு பொறிமுறையை உருவாக்கி விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது விடின் தொடரும் கனமழை காலங்களில் யாழ் மாநகரம் பெரும் அழிவுகளை சந்தக்க நேரிடும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனிடையே சேலைவரி நடைமுறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும் என்று கோரிக்கை விடுத்டுதிருந்த றெமிடியஸ் அதற்கான முன்மொழிவாக 30 வருடங்கள் ஒருவர் ஓர் இடத்தை பராமரித்து வந்தால் அதற்கான சொலைவரியை கட்டுவதற்கு வர் உரித்துடையவராவார் என்றும் இதனற்கான உறுதிப்படுத்தல்களை அச்சமூகத்திலுள்ள பெரியவர்கள் அல்லது மூத்த பிரையைகள் உறுதிப்படுத்துவதனூடாக அதை சான்றாக வைத்து வழங்கலாம் என்றும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதன்போது மற்றொரு கட்சியின் மாநகர சபை உறுப்பினரான ஜெயந்தினி கருத்து தெரிவிக்கும்போது தனது பகுதியில் உள்ள மதவு புனரமைப்பு தொடர்பில் ஆன்னாள் முதல்வர் ஆர்னோல்டிடம் தான் கோரியதாகவும் ஆனாபல் அது புனரமைக்கப்படாது தடுக்கப்பட்டு வந்தமையால் அண்மையிலேற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் தாங்கள் பாடசாலை ஒன்டறில் சில நாள்கள் தஞ்சமடைய நேர்ந்ததை சுட்டிக்காட்டியிரந்ததுடன் நேற்று பெய்த ஒருநாள் மழையால் தற்போது தனது பகுதியில் மிண்டும் அதே நிலைமை ஏற்பட்டதால் இன்று சபைக்க கூட தான் இன்னொரவரது வீட்டில் சென்றே உடுபுடவை அணிந்து வரவேண்டிய தர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டி தமது கோரிக்கையை உடனடியாக தீர்வு கண்டு தருமாறு கோரியிருந்தமை குகுறிப்பிடத்தக்கது..

Related posts: