ஒட்சினை தேவையை பார்க்கும் போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது – சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளர் சுட்டிக்காட்டு!

சுவாசிப்பதற்கு ஒட்சிசனை சார்ந்துள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையை ஒப்பீட்டளவில் பார்க்கும் போது நாட்டில் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுகாதார சேவைகளின் பிரதி பணிப்பாளரான வைத்தியர். ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையில் சிறிது வீழ்ச்சியை காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்சிசனைச் சார்ந்த நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது பெரும் நிவாரணம். இருப்பினும், இதுபோன்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் தாங்கள் ஒட்சிசனை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஒட்சிசனை இறக்குமதி செய்வதனை விட நாட்டில் ஒட்சிசனை உற்பத்தி செய்வதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தேசிய பாடசாலை ஆசிரிய பரம்பலை சீராக்கும் பணி மாகாணக் கல்விப் பணிப்பாளர்களிடம் ஒப்படைப்பு - கல்வி அமைச...
அரச உத்தியோகத்தர்களின் இடமாற்றங்கள் ஒத்திவைப்பு!
விரைவில் அலுகோசு பதவிக்கான நேர்முகப் பரீட்சை!
|
|