ஒக்டோபர் மாதத்துடன் தொடர்புடைய 14 இலட்சத்து 06,932 குடும்பங்களுக்கான அஸ்வெசும காப்புறுதிப் பலபலன் நிதி வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!

ஒக்டோபர் மாதத்துடன் தொடர்புடைய 1,406,932 குடும்பங்களுக்கான அஸ்வெசும காப்புறுதிப் பலனான 8,775 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், நாளை (05) முதல் பயனாளிகளின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படும் என அவர் குறித்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்ததன் பின்னர், தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு ஜூலை மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் சலுகைகள் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
000
Related posts:
கல்விக்காக கூடுதலான நிதி ஒதுக்கீடு – பிரதமர்!
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!
பளை இலங்கை வங்கி கிளைக்கு சென்றவர்களிடம் விசேட கோரிக்கை!
|
|