ஐ.நாவின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் யுனெஸ்கோ நிறைவேற்று சபைக்கு இலங்கை 144 வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2023-27 காலகட்டத்திற்கான 58 உறுப்பினர்களைக் கொண்ட அமைப்புக்கான தேர்தல் 42 வது யுனெஸ்கோ பொது மாநாட்டில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிலையில் 188 உறுப்பு நாடுகளில் 144 வாக்குகளைப் பெற்று இலங்கை நிறைவேற்று சபையில் தனது இடத்தைப் பெற்றுக்கொண்டது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், ஒன்பது வேட்பாளர்களில் ஆறு பேர் யுனெஸ்கோ உறுப்பு நாடுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இலங்கை, பாகிஸ்தான், இந்தோனேஷியா, பங்களாதேஷ், கொரியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கல்வியியல் கல்லூரிகளுக்கு 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்!
2 இலட்சம் மெற்றிக் தொன் நாட்டரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சரவை அங்கீகாரம்!
சிறுவர்களை போதைக்கு அடிமையாக்க இரகசிய திட்டம் - பெற்றோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!
|
|