ஐ.தே.கட்சியின் பிரதித் தலைவராக சஜுத் பிரேமதாச !

கட்சியின் முக்கிய பதவிகளுக்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ள பட்டியலை ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி , கட்சியின் புதிய பொதுச் செயலாளராக அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
தவிசாளராக அமைச்சர் கபீர் ஹசீம் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும் , தேசிய அமைப்பாளராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதித் தலைவராக சஜுத் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் , ரவி கருணாநாயக்க உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் , கட்சியின் பொருளாளராக ஹர்ச டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் பதவிகள் தொடர்பில் இறுதி தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக அதன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை அலரிமாளிகையில் கூடியது. இதன்போதே , இந்த பதவிகளுக்கான நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|