ஐ.எம்.எவ் இன் இரண்டாம் கட்ட கடனுதவி அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Saturday, November 18th, 2023

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்ட கடனுதவி அடுத்த மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப் பெறும் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்துடன் அபிவிருத்தி திட்டங்களுக்கான கடனுதவிகளை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் என்ற பெறுமதி சேர் வரி அமுல்படுத்தப்பட்டாலும், அதனூடாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது

எனவும் துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

0000

Related posts: