ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்ய வேண்டும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்து!

Wednesday, December 6th, 2023

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்து செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.

கல்வி அமைச்சின் வரவு – செலவுத் திட்டம் மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போன்று ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை இல்லாதொழிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அபிவிருத்தியடைந்த நாடுகளில் தரம் 8 வரை தவணைப்பரீட்சை நடத்தப்படுவது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தாம் ஜனாதிபதியாக பதவிவகித்த காலத்திலும் இதனை செயற்படுத்துவதற்கு முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையாத போது, மாணவர்கள் சில பெற்றோரினால் துன்புறுத்தப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: