ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிய இடம் கிடைக்கப்பெறவில்லை – அமைச்சர் ரவி கேள்வி!

2015ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சிக்கு உரிய இடம் கிடைக்கப்பெறவில்லை என ஒப்புக் கொள்வதாக, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும் அதிக நாட்கள் செல்லும் முன் உரிய இடத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெற்றுக் கொடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு – கெம்பல் மைதானத்தில் இடம்பெறும் அக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அத்துடன் ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜனாதிபதியாக இருந்த போது, திருகோணமலை எண்ணெய் தாங்கியை அமெரிக்காவுக்கு வழங்க முற்பட்ட போது மக்கள் அதனை எதிர்த்தாக சுட்டிக்காட்டிய அவர், அச் சந்தர்ப்பத்தில் குறித்த தாங்கியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என அவர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அதனை இந்தியாவுக்கு வழங்க முற்பட்ட போது அதனையும் எதிர்க்கின்றனர். அப்படி எனில் என்ன செய்யச் சொல்கின்றீர்கள் எனவும் ரவி கருணாநாயக்க இதன்போது கேள்வி எழுப்பினார்.
Related posts:
|
|