ஏப்ரல் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி – கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

Monday, April 19th, 2021

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் காலை 8.45 மணிமுதல் 2 நிமிடங்கள் ​மௌன அஞ்சலி செலுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: