ஏப்ரல் மாதம் முதல் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும்!

Monday, March 19th, 2018

ஏப்ரல் மாதம் முதல் ரயில் கட்டணம் 15 வீதத்தால் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எம். அபேவிக்ரம குறிப்பிட்டார்.

கட்டண அதிகரிப்பு தொடர்பில் இம்மாத நடுப்பகுதியில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

ரயில் கட்டணத் திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது ரயில் போக்குவரத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாவாகக் காணப்படுகின்றது.

10 ரூபா கட்டணத்தில் பயணம் செய்யக்கூடிய தூரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts: