எவரேனும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் இருந்தால் 31ஆம் திகதிக்கு முன்னர் வாக்கை பதிவு செய்ய முடியும்.- மஹிந்த தேசப்பிரிய விஷேட அறிவிப்பு!
Sunday, July 26th, 2020சுய தனிமைப்படுத்தல் உள்ளோருக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பவர்களுக்கு எதிர்வரும் 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று மகிந்த தேசப்பிரிய ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்கான வாக்கெடுப்பை ஜூலை 4 ஆம் திகதி நடத்த ஏற்கனவே கட்சிகளின் பொதுச் செயலாளர்கள் உடனான கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் 04ஆம் திகதி அதனை மேற்கொள்வதில் நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றன.
ஏனெனில் வாக்குப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை நான்காம் திகதி ஏனைய வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்ல உள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கான வாக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதி நடத்த தற்போது தீர்மானித்துள்ளோம்.
எவரேனும் வீடுகளில் சுய தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்டு இருந்தால் 31ஆம் திகதிக்கு முன்னர் அவர்கள் தமது வாக்கை பதிவு செய்ய முடியும்.
குறித்த பகுதிகளில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அரசியல் கட்சிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு தமது பிரதிநிதிகளை அனுப்ப முடியும்.
இதேவேளை வீடுகளில் உள்ள வாக்காளர்கள் யார் என்பது தொடர்பான தகவல்கள் மற்றும் அவரது புகைப்படங்களை ஊடகங்கள் வெளிப்படுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|