எல்லைதாண்டிய இந்திய மீனவர்கள் நால்வர் கைது!

அத்துமீறி இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
இன்று(07) அதிகாலை குறித்த 4 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களிடமிருந்து மீன்பிடி உபகரணங்கள் சிலவும் மற்றும் அவர்கள் பயணித்த படகும் கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த கோட்டைப்பட்டிணத்தைச் சேர்ந்த 4 மீனவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Related posts:
வரி சீர்த்திருத்தங்கள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்பட வேண்டும் - சர்வதேச நாணய!
தபால் மூல வாக்காளர்களின் 560,000 விண்ணப்பங்கள் செல்லுபடி!
கொரோனாவின் இரண்டாவது அலை முதலாவது அலையிலிருந்து வேறுபட்டது - குறைபாடுகள் அனைத்தும் நாளாந்தம் தீர்க்...
|
|