எல்லைதாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் கைது!

Friday, October 13th, 2017

இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியாவவைச் சேர்ந்த ஐந்து கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் ஐவரும் மன்னார் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த வேளையில் கைதாகியுள்ளனர். கைதானவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள உதவி கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த 10 கடற்றொழிலாளர்கள் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது இலங்கையிலுள்ள தடுப்பில் 47 இந்திய கடற்றொழிலாளர்கள் உள்ளனர். இதேவேளைஇ நாளைய தினம் டெல்லியில் இந்திய – இலங்கை கூட்டுக் கடற்றொழில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

Related posts: