எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் மரணம்!

Monday, November 19th, 2018

குருநாகல் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் காரணமாக 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 187 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் தெரிவித்துள்ளார்.

பொல்பிட்டிகம, ரிதீகம மற்றும் மஹவ ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உரியவகையில் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் எலிக்காய்ச்சலில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் இருப்பதாக வடமேல் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் எம். சரீட் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: