எரிபொருள் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் முறையான திட்டமொன்றை உடன் வகுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அரச தலைவர் பணிப்பு!

Tuesday, June 28th, 2022

எரிபொருள் விநியோகத்தை உரிய முறையில் முகாமைத்துவம் செய்வதற்கும் பராமரிப்பதற்கும் அடுத்த சில மாதங்களுக்கு முறையான திட்டமொன்றை உடன் வகுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச துறைசார் தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு நீண்டகாலமாக எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் (27) கொழும்பிலுள்ள அரச தலைவரது மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அரச தலைவர் இதனைத் வலியுறுத்தியுள்ளார்.

அதுவரை தற்போதுள்ள நிதியைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருள் விநியோகத்திற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை திட்டத்துடன் செலுத்துவதற்கு இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் இணங்கியுள்ளார்.

அதுவரை தற்போதுள்ள நிதியைப் பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: