எரிபொருள் கொள்வனவிற்கு பணமில்லை – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, July 30th, 2022

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வது பெரும் பிரச்சினையாக மாறியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ஓகஸ்ட் மாதத்திற்கான எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு 150 மில்லியன் டொலர்களை கூட வழங்க முடியாது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, எரிபொருள் இறக்குமதிக்கு மாதாந்தம் தேவைப்படும் 550 மில்லியன் டொலர்களை மாற்று முறைகளை பயன்படுத்தி கண்டுபிடிக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தற்போதுகூட நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை பெரும் பிரச்சினையாகவே உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: