எரிபொருள் – எரிவாயு விநியோகம் தொடர்பான முறைக்கேடுகளை அறிவிக்க விசேட இலக்கம்!

எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தின்போது, ஏற்படக்கூடிய முறைக்கேடுகள் தொடர்பில் அறிவிக்க விசேட கைப்பேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, தத்தமது பிரதேசங்களில் எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் அல்லது விநியோகத்தின்போது, ஏற்படக்கூடிய முறைகேடுகள் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் 0711 691 691 என்ற இலக்கத்தின் ஊடாக அறிவிக்கமுடியும் என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஐந்து நாட்களுக்கும் மேலாக பெற்றோல் மற்றும் டீசல் கொண்ட 4 தாங்கி ஊர்திகளை மறைத்து வைத்திருந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜா-எல – பமுனுகம பிரதேசத்தில் அனுமதியற்ற இடத்தில் குறித்த டீசல் மற்றும் பெற்றோல் தாங்கி ஊர்திகளை சந்தேகநபர் மறைத்து வைத்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் வத்தளை நீதிவான் நீதிமன்றுக்கு அறிவிக்கவுள்ளதாகவும் பமுணுகம பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|