எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி உதவி – நாட்டில் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் உதய கம்மன்பில இதனூடாக நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு தீர்வு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் –
கொழும்பு துறைமுகத்தில் உள்ள 2 கப்பல்களில் இருந்து எரிபொருளைப் பெறுவதற்கு மத்திய வங்கி நிதி வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதன்படி 37,000 மெட்றிக் டன் எரிபொருள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதிலிருந்து 10,000 மெட்றிக் டன் எரிபொருள் மின்சார சபைக்கு வழங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்றுமுதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நாளாந்தம் 1,000 மெட்றிக் டன் எரிபொருள் வழங்க தீர்மானித்துள்ளதாக கனியவள கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமானது எரிபொருள் விநியோகம் தொடர்பாக ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கை காரணமாக நாட்டில் மின்வெட்டு ஏற்படாது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்;.
Related posts:
|
|